திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன.
வடக்குத் தூண்கள்: தாலம் ஏந்திய பெண்டிர்
முதல் பார்வைக்கு ஒன்று போல் தெரிந்தாலும் '6 வித்தியாசங்கள் காண்க' போன்ற முறைமையில் நுட்பமாக ஆராய்ந்தால் உடல் பருமன், கொண்டை, அணிகள், ஆடைகள் என வேறுபாடுகள் பல காணலாம்.
தெற்குத் தூண்கள்: வாயிற்காவலர்கள்
சிவகங்கை குளத்தை நோக்கிய தெற்குத் தூண்களில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு வாயிற்காவலர் சிலைகள் உள்ளன.
வளைகாப்பு மண்டபத்தின் படிகள் தற்போது மேற்கில் அமைந்திருந்தாலும் வாயிற்காவலர் சிலைகள் தெற்கில் இருப்பதைக்கொண்டு இந்த மண்டபம் தெற்கில் உள்ள சிவகங்கை மண்டபத்தை நோக்கியது என்று அறியலாம். மேலும் தற்போது இந்த மண்டபம் உண்ணாமுலை அம்மனின் வளைகாப்பு வைபவத்திற்கு பயன்பட்டாலும் வாயிற்காவலர்கள் ஆண்களாக இருப்பதால் இது அண்ணமலையார், உண்ணாமலை அம்மன் இருவருக்குமான ஊஞ்சல் மண்டபமாக இருந்திருக்கலாம்.




வளைகாப்பு மண்டபம் - 6:
பதிலளிநீக்குபெண்டிரும் வாயிற்காவலரும்
பற்றிய குறிப்புகள் அசத்தல்.
தாலம் ஏந்திய பெண்டிர் -
இதில் *தாலம்*
என்ற சொல்லுக்கு
அர்த்தம் என்ன..?
வாயிற்காவலர்களின்
சிற்பங்கள் ஒரு காலை
உயர்த்தி வைத்திருப்பதற்கு
காரணம் ஏதாவது
இருக்கிறதா?
சிற்பங்களின்
புகைப்படங்கள் அருமை.