சனி, 13 பிப்ரவரி, 2021

வளைகாப்பு மண்டபம் - 7: மன்னர் சிலைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன.

கிழக்கில் உள்ள இரு தூண்களில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு இரு மன்னர்கள் சிலைகள் உள்ளன.


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் நெடுங்குணம் யோக ராமர் கோயில் செங்கமலவல்லி தாயார் முன் மண்டபத்தில் இரு தூண்களில் எதிர் எதிராக இதே போன்ற அரசர்கள் இருவரது சிலைகள் உள்ளன.

நீண்ட தொப்பி போன்ற அமைப்பு 

வளைகாப்பு மண்டபம் - 6: பெண்டிரும் வாயிற்காவலரும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன.

வடக்குத் தூண்கள்: தாலம் ஏந்திய பெண்டிர்


முதல் பார்வைக்கு ஒன்று போல் தெரிந்தாலும் '6 வித்தியாசங்கள் காண்க' போன்ற முறைமையில் நுட்பமாக ஆராய்ந்தால்  உடல் பருமன், கொண்டை, அணிகள், ஆடைகள் என வேறுபாடுகள் பல காணலாம்.

தெற்குத் தூண்கள்: வாயிற்காவலர்கள் 

சிவகங்கை குளத்தை நோக்கிய தெற்குத் தூண்களில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு வாயிற்காவலர் சிலைகள் உள்ளன.


வளைகாப்பு மண்டபத்தின் படிகள் தற்போது மேற்கில் அமைந்திருந்தாலும் வாயிற்காவலர் சிலைகள் தெற்கில் இருப்பதைக்கொண்டு இந்த மண்டபம் தெற்கில் உள்ள சிவகங்கை மண்டபத்தை நோக்கியது என்று அறியலாம். மேலும் தற்போது இந்த மண்டபம் உண்ணாமுலை அம்மனின் வளைகாப்பு வைபவத்திற்கு பயன்பட்டாலும் வாயிற்காவலர்கள் ஆண்களாக இருப்பதால் இது அண்ணமலையார், உண்ணாமலை அம்மன் இருவருக்குமான ஊஞ்சல் மண்டபமாக இருந்திருக்கலாம். 


வியாழன், 11 பிப்ரவரி, 2021

வளைகாப்பு மண்டபம் - 4: புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தில் வெளிப்புறம் உள்ள 12 தூண்களில் வடமேற்கு மூலைத் தூணில் உள்ளது புலிக்கால் முனிவரின் தூண் உயர அழகிய சிற்பம். இவர் வடமொழியில் வியாக்கிரபாதர் என்று அழைக்கப்படுகிறார். வியாக்கிரம் என்றால் புலி.  மனித உடலும் புலியின் கால்களும் உடையவர் ஆதலால் இந்த காரணப் பெயர் பெற்றார்.



வியாக்கிரபாதர் எனும் புலிக்கால் முனிவர் மகரத்தின் மேல் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். 

புராணம் 

புலிக்கால் முனிவரின் இயற்பெயர் மழன். மழன் சிறந்த சிவபக்தர். சிவனுக்குத் தூய மலர்களைச் சூட்ட வேண்டிப்  பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க எண்ணினார். அதற்காக  இறைவனை வேண்டி இரவுப் பார்வையும்,  மரம் ஏற புலிக்கால்களும் பெற்றார். 

அவரும் பதஞ்சலி முனிவரும் விரும்பியவாறு தைப்பூச நாளில் சிதம்பரத்தில் இறைவன் அவர்கள் காண ஆனந்தத் தாண்டவம் ஆடினார். 

பிரம்மபுரீசுவரர்  கோயிலுக்காக அறியப்பட்ட திருப்பட்டூரில் இவர் ஜீவ சமாதி அடைந்தார். 

வியாழன், 23 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 9: வெளித் தூண் சிறு சிற்பங்கள்

வளைகாப்பு மண்டபத்தில் வெளித் தூண்களில் உள்ள பெரிய அழகிய சிற்பங்களை முன் பதிவுகளில் பார்த்தோம்.

துர்க்கை சிற்பங்கள்:
வளைகாப்பு மண்டபம் 2: அவுணன் தலைமிசை நின்ற தையல்

புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்):
வளைகாப்பு மண்டபம்: 4. தூணுயரச் சிலைகள்

வெளித்தூண்களில் உள்ள சில சிறு தூண் சிற்பங்களை இங்கு பார்ப்போம்.

பெண்
கருக்கு 
கின்னரர்
அய்யனார்
ராமன், அனுமன் 
இரண்யவதம் 
கால சமஹார மூர்த்தி 
ராமர் - கோதண்டபாணி 
கோவர்தனத்தாரி
கருடன்
காளிங்க நர்த்தனம்
பிராம்மி 


வீரபத்திரர்
லட்சுமி நாராயணர் 
பிரம்மா
யோக தட்சிணாமூர்த்தி 
பெண்



சிம்மமும் யோக நரசிம்மரும் 
 













புதன், 22 ஜனவரி, 2020

பார்சுவநாதர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவன் கோயிலென்றாலும் அதன் பெரு கோபுரங்களையும் மண்டபங்களையும் பல சந்நிதிகளையும் உருவாக்கிய விஜயநகர அரசர்கள் தாக்கத்தினால் அவர்களுடைய கட்டுமானங்களில் வைணவச் சிற்பங்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரு சமண சிற்பமும் இருப்பது ஆச்சரியம்.

புரவி மண்டபத்தின் தெற்குப் பகுதி தூண் ஒன்றின் கீழ்ப்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது இந்த பார்சுவநாதர் சிற்பம்.

பார்சுவநாதர்: புரவி மண்டபம் 

உருத்திராட்ச மண்டபம்

கீழை ராஜ கோபுரத்தினுள் நுழைந்த உடன் நேரே கண்ணில் படும் உயரமான நான்கு கால் மண்டபம் உருத்திராட்ச மண்டபம்.

உருத்திராட்ச மண்டபம். பின்னல் நந்தி மண்டபம், கிளி கோபுரம்.

கீழே பாதம், அடுத்து சதுரம், மேலே நீளமான எட்டு பட்டை கட்டு, மேலே சிறிய சதுரம் என்றமைந்த நான்கு உயரமான தூண்கள். அவற்றின் மீது இருமுக மாங்கனிப் போதிகைகள். அவைமேல் உத்திரம். நான்கு புறமும் வெளிநீட்டிக் கொண்டிருக்கும் கபோதம். கீழ் சதுரத்தின் மேல் நான்கு மூலைகளிலும் நாக பந்தங்கள். கீழ் சதுரத்திலும், மேல் சதுரத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சிற்பம்.

உருத்திராட்ச மண்டபம் - தூண்
கூரை 

உருத்திராட்ச மண்டபம் கூரை உள்புறம்

உருத்திராட்ச மண்டபம் - கூரை உள்புறம்

கீழ் சதுர சிற்பங்கள் 

கிழக்கு பக்கம் - வெளி 

வாயிற்காவலர் 
வாயிற்காவலர் 

கிழக்குப் பக்கம் - உள் 

காளி 
நடராஜர்

 தெற்குப் பக்கம் - வெளி 
  

கிளிப்பெண்
ஆடை திருடும் கண்ணன்


தெற்குப் பக்கம் - உள் 

பிச்சாண்டவர்
விநாயகர்

மேற்குப் பக்கம் -  வெளி 

அர்த்தநாரி
சாரங்கபாணி - சார்ங்கம் எனும் வில் ஏந்திய விஷ்ணு 

மேற்குப் பக்கம் - உள் 

தட்சிணாமூர்த்தி
அதிகார நந்தி

வடக்குப் பக்கம் - வெளி 

நந்தியும் பெண்ணும் 
விஷ்ணு? வாயிற்காவலர்?

வடக்குப் பக்கம் - உள் 

பைரவர் நாயுடன்  
யோக நரசிம்மர்


மேற் சதுர சிற்பங்கள் 


கிழக்கு பக்கம் - வெளி 

ரிஷபாந்திகர்
திருமகள் 

கிழக்குப் பக்கம் - உள் 

மன்மதன் -
கிளி வாகனத்தில் அமர்ந்து
கரும்பு வில்லில் மலரம்பு
செலுத்தியவாறு 
கண்ணப்பர் 
  
 தெற்குப் பக்கம் - வெளி 
  

அப்பர்
காதலர்

  
தெற்குப் பக்கம் - உள்

முருகர் 
காளி

மேற்குப் பக்கம் -  வெளி 

திருஞானசம்பந்தர்?

நான்முகன்

மேற்குப் பக்கம் - உள் 

உமையடனான சந்திரசேகரர் 
இரண்யவதம்


வடக்குப் பக்கம் - வெளி 

அய்யனார்
மகேசுவரி
வடக்குப் பக்கம் - உள் 

பைரவர்
லிங்க வழிபாட்டில் அடியார்