வியாழன், 11 பிப்ரவரி, 2021

வளைகாப்பு மண்டபம் - 4: புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தில் வெளிப்புறம் உள்ள 12 தூண்களில் வடமேற்கு மூலைத் தூணில் உள்ளது புலிக்கால் முனிவரின் தூண் உயர அழகிய சிற்பம். இவர் வடமொழியில் வியாக்கிரபாதர் என்று அழைக்கப்படுகிறார். வியாக்கிரம் என்றால் புலி.  மனித உடலும் புலியின் கால்களும் உடையவர் ஆதலால் இந்த காரணப் பெயர் பெற்றார்.



வியாக்கிரபாதர் எனும் புலிக்கால் முனிவர் மகரத்தின் மேல் கைகூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். 

புராணம் 

புலிக்கால் முனிவரின் இயற்பெயர் மழன். மழன் சிறந்த சிவபக்தர். சிவனுக்குத் தூய மலர்களைச் சூட்ட வேண்டிப்  பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க எண்ணினார். அதற்காக  இறைவனை வேண்டி இரவுப் பார்வையும்,  மரம் ஏற புலிக்கால்களும் பெற்றார். 

அவரும் பதஞ்சலி முனிவரும் விரும்பியவாறு தைப்பூச நாளில் சிதம்பரத்தில் இறைவன் அவர்கள் காண ஆனந்தத் தாண்டவம் ஆடினார். 

பிரம்மபுரீசுவரர்  கோயிலுக்காக அறியப்பட்ட திருப்பட்டூரில் இவர் ஜீவ சமாதி அடைந்தார். 

1 கருத்து:

  1. மனித உடலும்
    புலியின் கால்களும்
    உடைய
    புலிக்கால் முனிவர்
    (வியாக்கிரபாதர்),
    சிவனுக்குத் தூய
    மலர்களைச் சூட்ட
    இரவுப் பார்வையும்
    புலியின் கால்களையும்
    வரமாகப் பெற்று
    சிவனுக்கு
    சேவை செய்து
    அவரது
    ஆனந்தத் தாண்டவத்தையும்
    சிதம்பரத்தில் கண்டுள்ளார்.

    அழகிய
    சிற்பங்கள் பற்றி
    நிறைவான தகவல்கள்.

    நன்றி..!

    பதிலளிநீக்கு