கோபியர் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் நீராடினர். குறும்புக்காரக் கண்ணன் அந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு கரையோர மரத்தின் மீது ஏறிக்கொண்டான். ஆடை வேண்டி கோபியர் கண்ணனை நோக்கி ஓலமிட்ட காட்சி தூண் புடைப்பு சிற்பங்களுக்கு ஒரு முக்கியக் கரு. கடவுளர் திருவுருவங்களைச் செதுக்கும்போது சிற்பியின் கற்பனைத் திறனுக்கு ஆகமங்கள் கடிவாளம் இடும். இக்காட்சிக்கு அத்தகைய தடைகள் இல்லாததால் இதன் ஒவ்வொரு படைப்பும் சிற்பியின் கற்பனைக்கு ஏற்ப வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
மரம், மரத்தின் மீது கண்ணன், அவன் கையில் ஆடைகள், ஆடைகளில்லா பெண்கள், அவர்கள் எண்ணிக்கை, கண்ணனிடம் ஆடை வேண்டி ஓலமிடும் வெவ்வேறு உடல் மொழி, நிலைகள் இவற்றை சிற்பிகள் தங்கள் கற்பனைக்கேற்ப ரசித்து வடித்த சிற்பங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வெவ்வேறு மண்டபங்களின் தூண்களில் உள்ளன. அவற்றின் ஒரு தொகுப்பு.
![]() |
| திட்டி வாசல் |
![]() |
| பெரிய நந்திக்கு பின் உள்ள 4 கால் மண்டபம் |
![]() |
| குதிரை மண்டபம் |
![]() |
| தீபதரிசன மண்டபம் |
![]() |
| தீபதரிசன மண்டபம் |
![]() |
| கல்யாண மண்டபம் |
மேற்கண்ட சிற்பங்கள் ஒரே சட்டகத்தில் அமைந்திருக்க, கல்யாண மண்டபத்தின் படிகளின் வலது புறத் தூணில் ஒரு வித்தியாசமான கற்பனை:
![]() |
| கல்யாண மண்டபம் |
நதியின் மேல் நீட்டியுள்ள கிளை ஒன்றின் மீது ஆடைகளோடு அமர்ந்துள்ளான் கண்ணன்.
![]() |
| கல்யாண மண்டபம் |
கரையும் மரமும் எங்கே? தூணினுள்!
![]() |
| கல்யாண மண்டபம் |
அதே தூணிலும் பக்கத்து தூணிலும் கண்ணனிடம் ஆடைளை இழந்த பெண்களின் சிற்பங்கள்!
![]() |
| கல்யாண மண்டபம் |
![]() |
| கல்யாண மண்டபம் |
கோபியரின் ஆடைகளைத் திருடும் கண்ணன் கதையைச் சொல்லும் சிற்பங்களுள் அபூர்வமானது இந்த படைப்பு.











இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு*கோபியர் ஆடை திருடும் கண்ணன்* கட்டுரையில் சிற்பியின் கற்பனைக்கு
பதிலளிநீக்குவானமே எல்லை போலும்...
"கரையும் மரமும் தூணினுள்"
இருக்கும்படியான
சிற்பம் இதற்கு சாட்சி.
தேடித் தேடி சிற்பங்களை
புகைப்படமாக்கியுள்ளீர்கள்.
அருமை.
படிப்பவர்கள்
இனி கோவில்களுக்கு சென்றால்
நிச்சயமாக சிற்பங்களை
தேடித் தேடி ரசிப்பார்கள்.