திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன. மேற்குப் பக்கம் உள்ள இரு தூண்களில் ரதியும் மன்மதனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உள்ளனர்.
![]() |
| மன்மதன்: வளைகாப்பு மண்டபம் |
![]() |
| மன்மதன்:வளைகாப்பு மண்டபம் |
இடது கையில் கரும்பு வில், வலது கையில் மலரம்புடன் மன்மதன். எதிர் தூணில் அழகிய ஆடை ஆபரணங்களோடு ரதி, பணிப்பெண்ணுடன்.
இதைவிட சிற்றிடைகொண்ட வேறு சிலை உள்ளதா?
வலது கையில் ஏந்திய மலர் உடைந்துள்ளது.
புராணம்
பிரம்மன் படைப்பைத் தொடங்கிய காலத்தில் அவர் மனதில் இருந்து தோன்றியவன் காமன் எனும் மன்மதன். அவன் தன மலரம்பை பிரம்மன் மீதே விட்டு சோதனை செய்ய, அவர் தன் மகளான சந்தியாவின் மீதே ஆசை கொண்டார். அவள் தற்கொலை செய்துகொண்டு தட்சனின் வியர்வைத் துளியிலிருந்து பெண்ணழகின் உச்சமாக ரதியாகத் தோன்றி மன்மதனின் துணைவி ஆனாள். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவ தவத்தை தன் மலர்ப்பாணங்களால் கலைத்து முக்கண் நெருப்பில் சாம்பலானான் மன்மதன். ரதியின் மன்றாடல்களால் அவளுக்கு மட்டுமே உரு ஆகும் அருவமாக உயிர்தெழுந்தான்.
மன்மதன், ரதி இருவருக்குமே கிளியே வாகனம்.
மன்மதனது மலரம்புகள் ஐந்து - தாமரை, முல்லை, அசோகம், மாம்பூ, நீலோத்பலம் எனும் நீல அல்லி.
மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!
மன்மதன் ரதி சிலைகளின் நுண்ணிய வர்ணனைகளுக்காக:
நன்றிக்கடன்




*வளைகாப்பு மண்டபம்: 4.*
பதிலளிநீக்கு*மன்மதன், ரதி*
கட்டுரை அருமை.
இதைவிட
சிற்றிடைகொண்ட
வேறு சிலை
உள்ளதா? என்ற
தங்களின் கேள்விக்கு
ஏற்ப ரதியின் சிலை
வடிவமைக்கப்பட்டுள்ளது.
"*மன்மதன், கிளி*
இருவருக்குமே
கிளியே வாகனம்"
என்ற வரியில்
*மன்மதன், ரதி*
என்று இருக்க
வேண்டுமோ?
அருமை..!
திருத்தி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி. 🙏
நீக்கு