வியாழன், 23 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 9: வெளித் தூண் சிறு சிற்பங்கள்

வளைகாப்பு மண்டபத்தில் வெளித் தூண்களில் உள்ள பெரிய அழகிய சிற்பங்களை முன் பதிவுகளில் பார்த்தோம்.

துர்க்கை சிற்பங்கள்:
வளைகாப்பு மண்டபம் 2: அவுணன் தலைமிசை நின்ற தையல்

புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர்):
வளைகாப்பு மண்டபம்: 4. தூணுயரச் சிலைகள்

வெளித்தூண்களில் உள்ள சில சிறு தூண் சிற்பங்களை இங்கு பார்ப்போம்.

பெண்
கருக்கு 
கின்னரர்
அய்யனார்
ராமன், அனுமன் 
இரண்யவதம் 
கால சமஹார மூர்த்தி 
ராமர் - கோதண்டபாணி 
கோவர்தனத்தாரி
கருடன்
காளிங்க நர்த்தனம்
பிராம்மி 


வீரபத்திரர்
லட்சுமி நாராயணர் 
பிரம்மா
யோக தட்சிணாமூர்த்தி 
பெண்



சிம்மமும் யோக நரசிம்மரும் 
 













புதன், 22 ஜனவரி, 2020

பார்சுவநாதர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவன் கோயிலென்றாலும் அதன் பெரு கோபுரங்களையும் மண்டபங்களையும் பல சந்நிதிகளையும் உருவாக்கிய விஜயநகர அரசர்கள் தாக்கத்தினால் அவர்களுடைய கட்டுமானங்களில் வைணவச் சிற்பங்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் ஒரு சமண சிற்பமும் இருப்பது ஆச்சரியம்.

புரவி மண்டபத்தின் தெற்குப் பகுதி தூண் ஒன்றின் கீழ்ப்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது இந்த பார்சுவநாதர் சிற்பம்.

பார்சுவநாதர்: புரவி மண்டபம் 

உருத்திராட்ச மண்டபம்

கீழை ராஜ கோபுரத்தினுள் நுழைந்த உடன் நேரே கண்ணில் படும் உயரமான நான்கு கால் மண்டபம் உருத்திராட்ச மண்டபம்.

உருத்திராட்ச மண்டபம். பின்னல் நந்தி மண்டபம், கிளி கோபுரம்.

கீழே பாதம், அடுத்து சதுரம், மேலே நீளமான எட்டு பட்டை கட்டு, மேலே சிறிய சதுரம் என்றமைந்த நான்கு உயரமான தூண்கள். அவற்றின் மீது இருமுக மாங்கனிப் போதிகைகள். அவைமேல் உத்திரம். நான்கு புறமும் வெளிநீட்டிக் கொண்டிருக்கும் கபோதம். கீழ் சதுரத்தின் மேல் நான்கு மூலைகளிலும் நாக பந்தங்கள். கீழ் சதுரத்திலும், மேல் சதுரத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சிற்பம்.

உருத்திராட்ச மண்டபம் - தூண்
கூரை 

உருத்திராட்ச மண்டபம் கூரை உள்புறம்

உருத்திராட்ச மண்டபம் - கூரை உள்புறம்

கீழ் சதுர சிற்பங்கள் 

கிழக்கு பக்கம் - வெளி 

வாயிற்காவலர் 
வாயிற்காவலர் 

கிழக்குப் பக்கம் - உள் 

காளி 
நடராஜர்

 தெற்குப் பக்கம் - வெளி 
  

கிளிப்பெண்
ஆடை திருடும் கண்ணன்


தெற்குப் பக்கம் - உள் 

பிச்சாண்டவர்
விநாயகர்

மேற்குப் பக்கம் -  வெளி 

அர்த்தநாரி
சாரங்கபாணி - சார்ங்கம் எனும் வில் ஏந்திய விஷ்ணு 

மேற்குப் பக்கம் - உள் 

தட்சிணாமூர்த்தி
அதிகார நந்தி

வடக்குப் பக்கம் - வெளி 

நந்தியும் பெண்ணும் 
விஷ்ணு? வாயிற்காவலர்?

வடக்குப் பக்கம் - உள் 

பைரவர் நாயுடன்  
யோக நரசிம்மர்


மேற் சதுர சிற்பங்கள் 


கிழக்கு பக்கம் - வெளி 

ரிஷபாந்திகர்
திருமகள் 

கிழக்குப் பக்கம் - உள் 

மன்மதன் -
கிளி வாகனத்தில் அமர்ந்து
கரும்பு வில்லில் மலரம்பு
செலுத்தியவாறு 
கண்ணப்பர் 
  
 தெற்குப் பக்கம் - வெளி 
  

அப்பர்
காதலர்

  
தெற்குப் பக்கம் - உள்

முருகர் 
காளி

மேற்குப் பக்கம் -  வெளி 

திருஞானசம்பந்தர்?

நான்முகன்

மேற்குப் பக்கம் - உள் 

உமையடனான சந்திரசேகரர் 
இரண்யவதம்


வடக்குப் பக்கம் - வெளி 

அய்யனார்
மகேசுவரி
வடக்குப் பக்கம் - உள் 

பைரவர்
லிங்க வழிபாட்டில் அடியார்






செவ்வாய், 21 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 8: உள் தூண் சிறு சிற்பங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை நான்கு தூண்கள் கொண்டது. அவற்றில் ஒவ்வொன்றிலும் இரு பக்கங்களில் அமைந்த தூண் உயரச் சிலைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்தப் பதிவில் அதே தூண்களில் மற்ற இரு பக்கங்களில் உள்ள சிறு சிற்பங்களைப் பார்க்கலாம்

உள் தென்மேற்குத் தூண் 

உள் தென்மேற்குத் தூண் - மேற்குப் பக்கம் 
  • இந்த தூணின் வடக்குப் பக்கம் மன்மதன், கிழக்குப் பக்கம் வாயிற்காவலர். மேற்குப் பக்கத்தில் முதன்மைத் தூணின் வடிவம் நன்கு தெரிகிறது. 
  • மூன்று சதுரங்கள் இடையே இரண்டு எண்பட்டைக் கட்டுகள். மூன்று சதுரங்களிலும் சிற்பங்கள். 
  • மேலே பாலகிருஷ்ணன். நடுவில் விநாயகர். 
  • கீழ் சதுரம் மற்றவற்றைவிட சிறப்பானது. அதன் மேல்பக்கம் நான்கு மூலைகளிலும் நாகபந்தங்கள் உள்ளன. இரு அழகிய பெண்களின் சிற்பங்கள். இசைக் கருவிகளுடன். அழகிய ஆடை அணிகள், கூந்தல் அலங்காரம். இந்த சிற்பங்கள் சதுரத்துள் அடங்காமல் தனித்திருப்பது சிறப்பு. 
  • முன்புறம் மன்மதன் காலுக்கு அருகில் ஒரு பெண்ணின் சிறு சிற்பம். நீண்ட கழி ஒன்றை ஏந்தியவாறு. அக்கழியின் மீது மன்மதன் முழங்கை ஊன்றியுள்ளது போல உள்ளது. 
  • எண்கோணக் கட்டுகளை தாமரைக் கட்டும் அதிலிருந்து தொங்கும் பதக்கங்களுடன் கூடிய மணிமாலைச் சரங்களும்.அலங்கரிக்கின்றன.
உள் தென்மேற்குத் தூண் - தெற்குப் பக்கம் - சரபர், பிச்சாண்டவர் 

  • மேல் சதுரத்தில் இரு   யானைகள். நடு சதுரத்தில் நரசிம்மரை அடக்கும் சிவ அவதாரமான சரபேசுவரர். (விவரம் காண சொடுக்குக:
    https://arunai-aalayam.blogspot.com/2018/12/blog-post_18.html
  • கீழ் சதுரத்தில் அழகிய பிச்சாண்டவர் சிலை. ஜடாமண்டலம் எனும் அழகிய முடியமைப்பு. ஆடையிலா திருக்கோலம். வலது முன்கை மானுக்கு புல் ஊட்ட, இடது முன் கையில் கபாலம். வலது பின் கை உடுக்கை தாங்க இடது பின் கை கழுத்திற்கு பின்பாக பிடித்திருப்பது தெரியவில்லை , சூலம் மரபு. இடது புறம் பிரம்மஹத்தி பூதம். அதன் பக்கத்தில் ஆடை நழுவியது தெரியாமல்  அவர் அழகில் சொக்கிக் கிடக்கும் தாருகவன முனிபத்தினிகளுள் ஒருவர். முனிபத்தினிகளையும் மயக்கிய பேரழகன் சிற்பம் மன்மதன் தூணில் அமைந்திருப்பது என்ன பொருத்தம். 
தென் கிழக்குத் தூண் -தெற்கு முகம் 

  • நடு சதுரத்தில் 
  • கீழ் சதுரத்தில்  துர்க்கை. பின்னால் வாகனமாகிய சிங்கம். 
  • எட்டு கரங்கள். முன் கரங்கள் காக்கும் கை, ஊரு  ஹஸ்தம். மேல் கைகளில் ஆழியும் , சங்கும். இரு கரங்களில் வாள், கேடயம். மற்ற இரு கைகளில் இருப்பது தெரியவில்லை.


உள் தென்கிழக்கு தூண் - கிழக்கு முகம் 
  • அரசர் சிலை பக்கத்தில் எளிய குடிமக்கள். 
  • கீழ் சதுரத்தில் வாள் கேடயத்துடன் ஒரு வீரன். நடு சதுரத்தில் ஆட்டக் கலைஞன் ஒருவன்.
வடகிழக்குத் தூண் - தெற்கு முகம் 

உள் வடகிழக்குத் தூண் - வடக்கு முகம் 
  • கீழே சுரம் நீக்கும் பரமன் - ஜ்வரபக்ன மூர்த்தி. இச்சிற்பத்தைப் பற்றி தனி இடதுகை உள்ளது: https://arunai-aalayam.blogspot.com/2018/12/3.html
  • நடுச்சதுரத்தில் கால பைரவர்.  சுடர்முடி (ஜ்வாலா மகுடம். 8 கரங்கள்.
வடமேற்குத் தூண் - வடக்கு முகம்

வடமேற்குத் தூண் - மேற்கு முகம் 
 





வெள்ளி, 17 ஜனவரி, 2020

வளைகாப்பு மண்டபம் - 5:. மன்மதன், ரதி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவில் உள்ள மேடை  நான்கு தூண்கள்  கொண்டது. அவற்றில் ஒன்றையொன்று பார்த்தவாறு திசைக்கு இரண்டாக எட்டு தூண் உயரச் சிலைகள் உள்ளன. மேற்குப் பக்கம் உள்ள இரு தூண்களில் ரதியும் மன்மதனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு உள்ளனர்.

மன்மதன்: வளைகாப்பு மண்டபம் 

மன்மதன்:வளைகாப்பு மண்டபம் 

இடது கையில் கரும்பு வில், வலது கையில் மலரம்புடன் மன்மதன்.  எதிர் தூணில் அழகிய ஆடை ஆபரணங்களோடு ரதி, பணிப்பெண்ணுடன்.


இதைவிட சிற்றிடைகொண்ட வேறு சிலை உள்ளதா? 
வலது கையில் ஏந்திய மலர் உடைந்துள்ளது.

புராணம் 

பிரம்மன் படைப்பைத் தொடங்கிய காலத்தில் அவர் மனதில் இருந்து தோன்றியவன் காமன் எனும் மன்மதன். அவன் தன மலரம்பை பிரம்மன் மீதே விட்டு சோதனை செய்ய, அவர் தன் மகளான சந்தியாவின் மீதே ஆசை கொண்டார். அவள் தற்கொலை செய்துகொண்டு தட்சனின் வியர்வைத் துளியிலிருந்து பெண்ணழகின் உச்சமாக ரதியாகத் தோன்றி மன்மதனின் துணைவி ஆனாள். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவ தவத்தை தன் மலர்ப்பாணங்களால் கலைத்து முக்கண் நெருப்பில் சாம்பலானான் மன்மதன். ரதியின் மன்றாடல்களால் அவளுக்கு மட்டுமே உரு ஆகும் அருவமாக உயிர்தெழுந்தான். 

மன்மதன், ரதி இருவருக்குமே கிளியே வாகனம். 

மன்மதனது மலரம்புகள் ஐந்து - தாமரை, முல்லை, அசோகம், மாம்பூ, நீலோத்பலம் எனும் நீல அல்லி.


கூடுதல் வாசிப்பிற்கு 

மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!

மன்மதன் ரதி சிலைகளின் நுண்ணிய வர்ணனைகளுக்காக:


நன்றிக்கடன்